• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

எம்விஎம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா..,

Byசோலைஆதி

Mar 30, 2026

சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 18ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி முன்னாள் நீதிஅரசர் ஏ.ஆர்.ரவி பேசும்போது,

பள்ளி மாணவர்கள் அதிக ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும், கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போலவே விளையாட்டு துறைக்கும் முக்கியத்துவம் அளித்து உடல் நலத்தை பேணி காக்க வேண்டும்.மாணவ, மாணவிகளின் கலைத்திறனை ஊக்குவிக்க வேண்டும் என்று பேசினார். இவ்விழாவிற்குபள்ளி தாளாளர் எம்விஎம் மருதுபாண்டியன் தலைமை வகித்தார்.எம்விஎம் குழும சேர்மன் மணிமுத்தையா, பள்ளிநிர்வாகி வள்ளிமயில் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் தீபாராகினி வரவேற்றார்.

விழாவில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம்.கே. முருகேசன், திமுக பொதுக்குழு உறுப்பினர் சோழவந்தான் கிரி, சோழவந்தான் நகை அடகு கடை சங்க நிர்வாகிகள்,பேரூராட்சி கவுன்சிலர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், மாணவ மாணவியர், பெற்றோர், ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.