• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அருண்குமாரின் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் புதிய படம் அறிவிப்பு

“கடந்த 10 ஆண்டுகளில், ETAKI ENTERTAINMENT நிறுவனம் தமிழ்த் திரையுலகத்தில் சர்வதேச தரத்திலான அசல் படைப்புகளை உருவாக்கும் நோக்கில் உறுதியாக செயல்பட்டு வருகிறது,
அதே நேரத்தில், ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில் ஜங் ஜக்’ மற்றும் ‘அவள்’ போன்ற படைப்புகளின் மூலம் புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.எங்கள் ‘தயாரிப்பு எண்.4’(தற்போதைய தலைப்பு) இரண்டு நம்ப முடியாத திறமைகளை ஒன்றிணைக்கவுள்ளது.
திறமையான மற்றும் உணர்ச்சிகரமான கதை சொல்லியான இயக்குநர் S.U.அருண்குமார் (பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி) பன்முகத் திறமையும் தனித்துவமான நடிகருமான சித்தார்த்துடன் இணைந்து ஒரு முக்கியமான படைப்பை தரவுள்ளார்.இது உலகளாவிய பார்வையாளர்களை கவரும் ஒரு அருமையான கிளாசிக் சினிமாவாக இருக்குமென நம்புகிறோம்.எங்களின் புதிய முயற்சியான இப்படைப்பு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும்.
சக்தியும், கருணையும் கொண்ட எங்களின் தெய்வமான முருகப் பெருமானின் ஆசீர்வாதத்துடன், எங்கள் கதை அமைந்திருக்கும் தமிழ்நாட்டின் பழனியில் தற்போது படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்.
நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்கள், எங்களின் மதிப்புமிக்க வெளியீட்டு கூட்டணியாளர்கள் மற்றும் எங்களின் பட வெளியீடு உள்ளிட்ட விவரங்களை விரைவில் பகிர்வோம். இந்த முக்கியப் படைப்பை விரைவில் உங்களுக்குக் காண்பிக்க ஆவலுடன் உள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.