விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்ட சிறுவர் இளைஞர்களுக்கான தனியார் ஆடையகம் இன்று திறக்கப்பட்டது.
இக்கடையின் புதிய திறப்பு விழாவையொட்டி முதலில் வரும் 1000 நபர்களுக்கு ஐந்து ரூபாய்க்கு 3 டி-சர்ட் வழங்கப்படும் என அதிரடி ஆஃபர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை முதலே புதிதாக திறக்கப்படும் கடையின் முன்பாக ஏராளமான சிறுவர்கள்- இளைஞர்கள் திரண்டதால் மதுரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் கடைக்குள் ஒரே நேரத்தில் ஏராளமான சிறுவர்கள் இளைஞர்கள் செல்ல முயன்றதால் கடை நிர்வாகத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த சாத்தூர் நகர் போலீசார் கடையின் முன்பாக திரண்டு இருந்த ஏராளமான சிறுவர்கள்-இளைஞர்களை அங்கிருந்து அப்புறபடுத்தினார்.
மேலும் ஒரே நேரத்தில் ஏராளமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டதால் 5 ரூபாய்க்கு மூன்று டி-சர்ட் என்ற ஆஃபரை கடை நிர்வாகம் நிறுத்தி வைத்தனர். மேலும் டோக்கன் வாங்கிய 300 பேருக்கு டி-சர்ட் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடை நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால் காலை முதல் கடை முன்பு காத்திருந்த இளைஞர்கள்-சிறுவர்கள் பெரும் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பிச் சென்றனர்.