திருவாடானை தாலுகாவில் தனியார் மஹாலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருவாடானை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கண்.இளங்கோவன் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் நாகூர் கனி, மாவட்ட மகளிர் பாசறை புனிதா, மாவட்ட செயலாளர் குமரன், மாவட்ட பொருளாளர் காளீஸ்வரன், ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக டாக்டர் களஞ்சியம் சிவக்குமார் பங்கேற்றார். நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காளீஸ்வரன் மற்றும் திருவாடானை பொறுப்பாளர்கள் செய்திருந்தார்கள். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.