• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கேஸ் விநியோகஸ்தர்கள் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவிப்பு..,

ByS. SRIDHAR

Mar 12, 2026

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கேஸ் விநியோக நிறுவனங்கள் உடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் அருணா முன்னுரிமை அடிப்படையில் வீடுகளுக்கான கேஸ் வினியோகம் முறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும்.

பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையான அளவு கேஸ் சிலிண்டர்கள் கையிருப்பு உள்ளது என்றும்,
கூறினார்..

மேலும் முன்னுரிமை அடிப்படையில் மருத்துவமனைகள் காலை உணவுத் திட்ட பள்ளிகள் மாணவ மாணவியர்கள் தங்கு விடுதிகள் ஆகியவற்றிற்கு கேஸ் சிலிண்டர் தடையின்றி அனுப்பப்பட்டுள்ளது.என கூறினார். ஆதலால் கேஸ் தட்டுப்பாடு என பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை விழிப்புணர்வுடன் மக்கள் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் இயற்கை எரிவாயு விநியோக தஸ்ர்களிடம் பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து இயற்கை எரிவாயு விநியோகஸ்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.