• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

‘பெரியார் குறித்து சீமான் பேசியது சரிதான்’! – அண்ணாமலை சப்போர்ட்

ByP.Kavitha Kumar

Jan 9, 2025

பெரியார் குறித்து சீமான் பேசியது சரிதான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து சீமானுக்கு க்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரியார் குறித்து சீமான் பேசியது சரிதான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ” பெரியார் குறித்து சீமான் பேசியதற்கான ஆதாரங்களை நான் வெளியிடுகிறேன். சீமான் கூறியதை பெரியார் எப்போது எங்கு பேசினார் என்று ஆதாரங்களை இன்று நான் வெளியிடுகிறேன். பெரியார் பேசியதை பொதுவெளியில் கூறினால் நாகரீகமாக இருக்காது.

யுஜிசி புதிய விதி குறித்து நகலை வழங்கியுள்ளோம், நீங்கள் கருத்து தெரிவியுங்கள் என மத்திய அரசு கூறியுள்ளது. துணைவேந்தர் நியமனத்தில் பேராசிரியர் அல்லாத மற்ற துறைகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பாராட்ட வேண்டும்” என்றார் அண்ணாமலை.