• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலை பதவி விலகனும்… களமிறங்கிய ஜோதிமணி!

By

Aug 28, 2021 , , ,

சர்ச்சைக்குரிய பாலியல் வீடியோ வெளியான விவகாரத்தில் பாஜக பிரமுகர் கே.டி. ராகவனை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே. டி. ராகவன் பெண் ஒருவரிடம் ஆபாசமாக பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. இதனையடுத்து அவர் மாநில செயலாளர் பதவியிலிருந்து விலகி விட்டார்.

இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை மற்றும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் அதுமட்டுமில்லாமல் பாஜக மாநில தலைவர் அண்ணமலை பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் இருந்து சென்னை தி. நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டனர்.
இதில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை ஆகியோருடன் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டம் பேரணியை தொடங்கும் பொழுதே காவல்துறையினர் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். பின்னர் காவல்துறைக்கும் காங்கிரஸ் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.