• Tue. Feb 3rd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டியில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்

ByI.Sekar

Feb 25, 2024

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையில், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் அமரேசன், பேரூர் செயலாளர் அருண்மதி கணேசன் ஆகியோர் முன்னிலையில் வைகை சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து ,அதனைத் தொடர்ந்து அங்கே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மாலை மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னதாக நடந்த கோலப் போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, அன்னதானம் வழங்கி கொண்டாடினார்கள். விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுமதி வடிவில் கணேசன் பேரூர் கவுன்சிலர் உமா மகேஸ்வரி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம் நிர்வாகிகள் பாக்கியராஜ் வீரக்குமார் ரத்தினபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்