

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க வினரால் அதி விமர்சியாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்ட அம்மா பேரவை சார்பில், தேனி அரசு மருத்துவ கல்லூரியில் 24 ஆம்தேதி இரவு 12 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர், மாவட்ட இணை செயலாளர் முத்துலட்சுமி, மாவட்ட துணை செயலாளர் சோலைராஜ், நகர கழக செயலாளர் தேனி நகரக் கழகச் செயலாளர் கிருஷ்ணகுமார் மாவட்ட பொருளாளர் வைகை பாண்டி, அம்மா பேரவை மாநில இணை செயலாளர் ஜெயக்குமார், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கரிகாலன், பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர், அன்னபிரகாஷ், பெரியகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜகுரு மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

