• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைக்க அனிருத் மறுப்பு?

ByA.Tamilselvan

Nov 8, 2022

லைகா நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த 2 படங்களுக்கு இசையமைக்க அனிருத் மறுத்துவிட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது அனிருத் தான் கோலிவுட்டில் படுபிஸியாக பணியாற்றி வரும்இசையமைப்பாளர். அவர் கைவசம் அட்லீயின் பாலிவுட் படம் ஜவான், விஜய்யின் தளபதி67 உள்ளிட்ட பெரிய படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன.
மாஸான ஹீரோக்கள் என்றால் அவர்கள் நடிக்கும் புதிய படத்திற்கு அனிருத்தை தான் தயாரிப்பாளர்கள் அணுகுகிறார்கள். இந்த நிலையில் ரஜினியை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க லைக்கா நிறுவனம்திட்டமிட்டுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினி லைகா நிறுவனத்தின் இரண்டு படங்களில் அடுத்து நடிக்க இருக்கிறார். அந்த இரண்டு படங்களுக்கும் அனிருத்தை இசையமைக்க கேட்டிருக்கிறார்களாம்.ஆனால் அனிருத் ஒவ்வொரு படத்திற்கும் சுமார் 10 கோடி அளவுக்கு சம்பளம் கேட்டார் என்றும், அவ்வளவு பெரிய தொகை கொடுக்க முடியாது என லைகா மறுத்துவிட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.எனவே சூப்பர்ஸ்டார் படத்திற்கு இசையமைக்க அனிருத் மறுத்தவிட்டதாகவும் தகவல் வெளியாகிஉள்ளது.இதனால் சூப்பர்ஸ்டாருக்கு இசையமைக்கும் பிரம்மாண்ட இரண்டு வாய்ப்புகளை அனிருத் மிஸ் செய்திருக்கிறார் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.