விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஊரக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் பதவி உயர்வு கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் விமலா ராணி, சத்யா, கவிதா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு விருதுநகர் மாவட்ட துணைத்தலைவர்கள் கணேசன், சோமசுந்தரம் மற்றும் நகர, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.




