• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

எம்.பி நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு..!

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட இந்திரா காலனியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.11.80 லட்சத்தில் கட்டப்பட்ட, புதிய அங்கன்வாடி கட்டிடத்தை விஜய் வசந்த் எம்பி.,திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம், பேரூராட்சி உறுப்பினர்கள் ஆனிரோஸ், பூலோகராஜா, டெல்பின், நகர காங்கிரஸ் தலைவர் நெப்போலியன், முன்னாள் கவுன்சிலர் தாமஸ், நகர செயல் தலைவர் விஜயா,திமுக இலக்கிய அணி செயலாளர் எஸ்.அன்பழகன், திமுக நிர்வாகி புனிதன் ஆகியோர் பங்கேற்றனர்.