• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அங்காள பரமேஸ்வரி – வால குருநாதர் கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா..,

ByK Kaliraj

Sep 9, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள குண்டலகுத்தூர் கிராமத்தில் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி வால குருநாதர் மற்றும் கருப்பசாமி திருக்கோவில் உள்ளது.

இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வருகிறது.

இக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேக திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

சாத்தூர் குண்டலகுத்தூர் சிறுக்குளம் சொக்கலிங்கபுரம் அப்பைய நாயக்கன்பட்டி, கோட்டூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வந்திருந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்

இந்த கும்பாபிஷேக திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது இன்று அதிகாலை அஸ்வந்த் என மகா யாகசாலை பூஜையிடம் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.

கோவிலில் வீற்றிருக்கும் வால குருநாதர் அங்காள பரமேஸ்வரி விநாயகர் கருப்பசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த கும்பத்தில் உள்ள புனித தீர்த்தத்துடன் கோவிலில் உள்ள விமானங்களில் கும்பாபிஷேக தீர்த்தம் மூச்சு கும்பாபிஷேக பெருவிழா புனித மந்திரங்கள் ஓதி நடைபெற்றது.

கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் கும்பாபிஷேக புனித தீர்த்தத்தை கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பொதுமக்கள் என அனைவருக்கும் கிடைக்கப் பட்டது.

கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கும்பாபிஷேக தீர்த்த மழையில் நனைந்தனர்.

கும்பாபிஷேகம் நடைபெற்ற போது கருடன் வானில் பறந்தது அதைக் கண்ட பக்தர்கள் ஓம் சக்தி என்ற கோஷத்தை எழுப்பினர்

கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் கோவிலில் உள்ள வாலகுருநாதர் அங்காள பரமேஸ்வரி விநாயகர் கருப்பசாமி கால பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பின்னர் அலங்காரம் செய்யப்பட்டது.

திருக்கோவில் அருகே நாள் முழுவதும் வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை 24 மனை தெலுங்கு செட்டியார்கள் மற்றும் மருளாடிகள் பரம்பரை பூசாரிகள் பாதகுரடு மணியாரிகள் கோவில் நிர்பந்த வரை செய்திருந்தனர்.