
திண்டுக்கல் சாணார்பட்டி அருகே உள்ள பாலராஜக்காபட்டி கல்லுப்பட்டியில் அமைந்துள்ள அங்காள ஈஸ்வரி , பெருமாள் , அருள்மிகு சோமாவீரன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புண்ணிய தீர்த்தம் பெற்று சாமி தரிசனம்.

திண்டுக்கல் அருகே 14 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான திருப்பணிகள் நிறைவுற்ற பின்னர் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவிற்காக காசி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், காவேரி, சுருளி,அழகர்கோவில், பாபநாசம், பம்பை, கொடுமுடி,திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் கோயிலை சென்றடைந்தது. கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் கணபதி, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், தேவதா அனுக்ஞை ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது.
நான்காம் கால யாக பூஜையைத் தொடர்ந்து யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனித தீர்த்தக் கலசங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலைச் சுற்றி வந்து கோயிலின் விமானத்தை சென்றடைந்தது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் விமானத்தில் ஊற்றப்பட்டது. அப்போது கோயிலை சுற்றி நின்ற பக்தர்கள் குலவையிட்டு கோவிந்தா, கோவிந்தா என பரவசத்தோடு கோஷமிட்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கும்பத்தில் இருந்து பக்தர்களுக்கு புனித தீர்த்தமும் பூஜை மலர்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் ராஜாக்கபட்டி கல்லுப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஊரில் நல்ல மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும், உலக மக்களுக்கு நன்மை பெற வேண்டியும், ஊர் பொதுமக்கள் ஒற்றுமையுடன் இருக்கவும், கல்லுப்பட்டியில் இந்த மகா கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்றது.
