• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நெரிசலில் சிக்கி தவிக்கும் ஆண்டிபட்டி.. போக்கு காட்டும் அரசு!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பிரதான சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. மதுரை முதல் கொச்சின் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி நகரம் அமைந்துள்ளது. ஆண்டிபட்டி கிழக்குபகுதி கொண்டமநாயக்கன் பட்டியிலிருந்து தாலுகா அலுவலகம் வரையிலுள்ள இரண்டு கிலோமீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலையின் பிரதான பகுதியாக உள்ளது .

இந்த சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் இரு பக்கங்களிலும் பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என்று எந்த நேரமும் பிஸியாக உள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சில சமயம் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கிக் தவிக்கிறது.

சாலைகளில் நடந்து செல்வோர் சாலையை கடக்க முடியாமல் அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டியது நிலை ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால் நெரிசலை சீர்படுத்த முடியவில்லை. ஆகவே இந்த பகுதிக்கு புறவழிச்சாலை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், இதற்கு முந்தைய அதிமுக அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும், திமுக அரசாவது அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.