திருப்பரங்குன்றம் மலை குகையில் கிமு 2ம் நூற்றாண்டு வரை ஒவியம், தமிழி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு.2200 ஆண்டு பழமையான தமிழி கல்வெட்டை தொல்லியல் துறை ஆய்வு செய்ய தமிழ் ஆய்வாளர்கள் கோரிக்கை.
மதுரை திருப்பரங்குன்றம் மலைக் குகையில் 2200 ஆண்டுகள் பழமையான ஒரு தமிழிக் கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி புதிதாக கண்டுபிடித்துள்ளார்.
தமிழ் கடவள்முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானதாக விளங்குகிறது மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம். இக்குன்று முழுவதும் வரலாற்றுச் சிறப்புடையதாகத் திகழ்கிறது.இக்குன்றில் முற்கால பாண்டியர்களின் பல குடைவரைக் கோயில்கள் உள்ளன. திருப்பரங்குன்றம் புகைவண்டி நிலையம் எதிரில் உள்ள குன்றின் மேற்குச் சரிவில் இயற்கையாக அமைந்த இரண்டு குகைகள் உள்ளன. அதில் மேலே உள்ள குகையில் ஏராளமான கற்படுக்கைகளும் கி.மு.2 மற்றும் கி.பி.1-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று தமிழி கல்வெட்டுகளும் உள்ளன. இவை மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.



இந்நிலையில் மேலே உள்ள குகைக்குப் போகும் வழியில் அதன் இடதுபுறம் இயற்கையான ஒரு சிறிய குகை உள்ளது. இதன் உள்ளே ஐந்து கற்படுக்கைகள் உள்ளன. வட்ட வடிவமான இதன் முகப்புப் பகுதியில் மழை நீர் உள்ளே செல்லாதவாறு காடி வெட்டப்பட்டுள்ளது. இக்குகையின் விதானத்தின் மேற்குப் பகுதியில் ஒரு தமிழி கல்வெட்டு இருப்பதை பாறை ஓவியம், கல்வெட்டு, குடைவரைகள் பற்றி ஆய்வு செய்து வரும் மதுரை தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி கண்டுபிடித்து படித்தார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று இக்கல்வெட்டை படி எடுத்து, மூத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் உதவியுடன் மீண்டும் படித்தனர்.
இது பற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி ஆகியோர் கூறியதாவது,
இக்கல்வெட்டு இரண்டு வரிகளாக இருந்துள்ளது. முதல் வரியில் த, ர போன்ற சில எழுத்துகள் தவிர மற்றவை முழுவதும் சிதைந்துள்ளன. இரண்டாம் வரியிலும் சில எழுத்துகள் அழிந்துள்ளன. சில எழுத்துகள் கொஞ்சம் இடைவெளி விட்டு எழுதப்பட்டுள்ளன. முதல் வரியின் தொடர்ச்சியாக அமைந்த இரண்டாம் வரியில் உள்ள எழுத்துகளை ‘யாரஅதிறஈத்த/////வதர’ என படிக்கலாம். குகையில் வெட்டப்பட்டுள்ள ஐந்து கற்படுக்கைகளைக் குறிக்க 5 என்ற எண்ணாக 5 கோடுகள் கொஞ்சம் சாய்ந்த நிலையில் மிகவும் தெளிவாக வெட்டப்பட்டுள்ளன.
இக்கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவர் பெயராக ‘யாரஅதிற’ என்பதைக் கொள்ளலாம். இதன் இறுதியில் உள்ள எழுத்துகளை அதிட்டானம் என முயன்று படிக்கலாம். இதில் ‘அ’ சிதைந்துள்ளது. அதிட்டானம் என்றால் இருக்கை எனவும் பொருளுண்டு. இது குகையில் வெட்டப்பட்டுள்ள கற்படுக்கையிலான இருக்கையைக் குறிக்கிறது. அரிட்டாபட்டி, தொண்டூர் ஆகிய ஊர்களில் உள்ள தமிழிக் கல்வெட்டிலும் 3 கற்படுக்கைகளைக் குறிக்க 3 கோடுகள் செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடினமான பாறையிலும் கல்வெட்டு சிதைந்திருக்கும் நிலை, “அ” மற்றும் “ர” போன்ற எழுத்துகளின் வடிவமைப்பு, “ஐந்து” என்ற எண்ணைக் குறிக்க ஐந்து கோடுகளை செதுக்கி வைத்திருக்கும் முறை ஆகியவற்றைக் கொண்டு இதன் மேலே உள்ள 3 குகைக் கல்வெட்டுகளை விட புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டு காலத்தால் முந்தியது என்பதை அறிய முடிகிறது. எனவே இக்கல்வெட்டை கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்.
இக்கல்வெட்டை மத்திய தொல்லியல் துறையும், தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேலும் ஆய்வு செய்து இதன் முழு வாசகத்தையும் வெளிக் கொண்டு வர வேண்டும் எனக் கூறினார்.
- குறள் 414கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குஒற்கத்தின் ஊற்றாந் துணை. பொருள் (மு.வ): நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய […]
- திண்டுக்கல்லில் பெண்களுக்கு விடப்படும் இலவச பேருந்துகளில்..,
கட்டணம் வசூலிப்பதாக புகார்..!திண்டுக்கல் ரயில்வே நிலையத்திற்கு அதிகாலை நேரத்தில், தமிழக அரசு பெண்களுக்கு விடப்படும் இலவச பேருந்துகளில் கட்டணம் […] - சிவகாசி அருகே மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு ரூ. 9 லட்சம் செலவில் சாலை வசதிசிவகாசி அருகே மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக சாலை வசதி அமைத்து கொடுக்கப்பட்டது.விருதுநகர் […]
- திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தேரை இழுக்க கிராம மக்களுக்கு அழைப்பு..!மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி […]
- பீகார் மாணவிகள் நாகர்கோவிலில் கல்வி பயில்வது தேச ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு -தமிழிசைபீகாரில் இருந்து மாணவிகள் இங்கு வந்து கல்வி பயின்று வருகின்றனர் இதை பார்க்கின்ற போது தேசிய […]
- ஏப்ரல் 1ம் தேதி ஆளுநர் ஆர்என்.ரவி ராஜபாளையம், சிவகாசிக்கு வருகைவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் உள்ள கல்லூரிகளின் விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து […]
- முதியவரின் உயிரை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைஆபத்தான இதய சிதைவினால் பாதிக்கப்பட்ட முதியவரின் உயிரை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை.தென் தமிழ்நாட்டில் […]
- மதுரையில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் ஆயத்த கூட்டம்மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் […]
- நீலகிரி அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்புநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. […]
- மஞ்சூர் பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக […]
- ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா- இயக்குநர் வம்சி -தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் […]
- உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளதுஉக்ரைன் மற்றும் […]
- ராமதாஸின் நிலைப்பாட்டை தவிர்க்க கோரிக்கைதமிழ்நாடு முழுவதும் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் அதனை மையிட்டு அழிப்போம் என […]
- நெருக்கமாக நடிக்க என்ன காரணம் அம்மா நடிகையின் வாக்குமூலம்“தெலுங்கு நடிகை சனா. சுமார் 200 படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். நடிகை சனாவின் முழுப் […]
- மேற்கத்திய நாடுகளில் இசை கச்சேரி நடத்தும் யுவன்சங்கர்ராஜாசமீபத்திய ‘லவ் டுடே’ உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் ஆல்பங்களின் முகவரியான இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் […]