சென்னை தாம்பரத்தில் பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர்,
விழுப்புரத்தில் 20-ம் தேதி நடைபெற உள்ள வன்னியர் இட ஒதுக்கீடுக்கான போராட்டம் குறித்தும், 25 ம் தேதி அன்புமணி ராமதாசு மேற்கொள்ள உள்ள உரிமை மீட்பு இயக்கம் என்ற நடைபயணம் குறித்தும் தாம்பரம் மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து வருவதாக தெரிவித்தார்.

அதேபோல் தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தபட்டிருப்பதாகவும் ஒரு கருவியை கண்டெடுத்ததாகவும் பாமக நிருவணர் மருத்துவர் ராமதாசு நேற்று தெரிவித்து இருந்தது அதிர்ச்சியளித்திருப்பதாகவும் ,அது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு விசாரனை நடத்த வேண்டும் என்றார்.

மேலும் இதற்கென தனி சைபர் பிரிவு குழுவை தமிழக அரசு அமைத்து , இந்த கருவியின் பின்னணியில் யார் உள்ளார்கள் எதற்காக அதை பொருத்தினார்கள், எதை ஒட்டு கேட்க இப்படி செய்தார்கள் என்பதையெல்லாம் கண்டுபிடித்து பாமக தொண்டர்கள் மற்றும் மக்களிடன் அதை தெரிவிக்க வேண்டும் என்றார்.
அதோடு பாமகவினர் புனித இடமாக தேவாலையம் போல் கோவில் போல் கருதி செல்ல கூடிய தைலாபுரம் இல்லத்தில் தற்போது யார்யாரோ வந்து செல்ல கூடிய நிலையில் இது போன்ற நிகழ்வு ஆபத்தானதும் வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் 20ம் தேதி விழுபுரம் வன்னியர் உள் இட ஒதுக்கீடு போராட்டத்தில் திமுக வன்னியர்களுக்கு செய்த துரோகத்தையும் ஏமாற்றத்தையும் விளக்க போவதாகவும், அன்றைய நாள் தற்போதைய முதல்வரை ஆட்சியில் இருந்து இறக்குவதற்கு நாள் குறிக்கும் நாளாக அமையும் என்றும் தெரிவித்தார்.
மேலும் சமூக வலைதளங்களில் எந்த கருத்தையும் பதிவிட வேண்டாம் என ராமதாசு மற்றும் அன்புமனி ராமதாசு இருவரும் அறிவுருத்துவதாகவும் ஆனால் சில விஷமிகள் தவறான கருத்துக்களை தொடர்ந்து பதிவிடுவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் பாமகவில் உள்ள தற்போதைய நிலையால் கட்சியினர் யாரும் சோர்வடைய வில்லை மாறாக முன்பைவிட தீவிரமாக செயல்படுவதாக தெரிவித்த அவர், தற்போது பாமக நிலை குறித்த பல கேள்விகள் இன்னும் மூன்று மாதத்திற்கு பின்னர் தேவையற்ற கேள்விகளாக கூட மாறலாம் என்றார்.
மேலும் மருத்துவர் அன்புமணி ராமதாசை கிராமங்களுக்கு சென்று மக்களொடு மக்களாக வாழ வேண்டும் என மருத்துவர் ராமதாசு அறிவுத்தியதால் தான் வரும் 25 ம் தேதி 100 நாள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும்,அதை மருத்துவர் ராமதாசு துவக்கி வைத்தால் மகிழ்ச்சியளிக்கும் என்றும் கூறினார்.