திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் (SLAS 2025) ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
பின் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,
RTE நிதி அதிக பங்கீடு மாநில அரசுதான் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரதான் கூறியது குறித்த கேள்விக்கு

60:40 என இருக்கும் பொழுது மாநில அரசு எப்படி முழுமையாக நிதி கொடுக்க முடியும். அவர் சொல்வது அரை குறையாக கொடுத்து நிறுத்துங்கள் என்பது போல் உள்ளது.
RTE Act என்பது உச்ச நீதிமன்றத்தால் கொண்டுவரப்பட்டது. மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஏழை பிள்ளைகளும் தனியார் பள்ளிகளில் 25% படிக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது.
யாரும் இதில் தலையிட முடியாது ஒரு அரசாங்கம் வருடம் வருடம் பணம் வெளியிட தான் வேண்டும்.
மத்திய அரசு உச்ச நீதிமன்றம் சொல்வதையே கேட்க மாட்டேன் என்பது போல் தான் இதை புரிந்து கொள்ள முடியும்.
நமது மாணவர்களின் நலன் கருதி உடனடியாக அந்த பணத்தை மத்திய அரசு கொடுக்க வேண்டும்.
கண்டிப்பாக மத்திய அரசு நல்ல முடிவு எடுப்பார்கள். அரசியல் பார்க்காமல் மாணவர்களின் நலனை பார்க்க வேண்டும். ஒரு வருடத்தில் ஒரு லட்சம் பிள்ளைகள் இதனை சார்ந்து படிக்கின்றனர்.
இவர்கள் செயலால் இணையதளத்தை திறக்க முடியாத நிலை உள்ளது. மத்திய மற்றும் மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர் இதுகுறித்து பேசி வருகின்றனர்.
நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டதை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாமல் உள்ளது என மத்திய அமைச்சர் கூறியது குறித்த கேள்விக்கு
தமிழ்நாடு தனித்தன்மையான மாநிலம்.
மும்மொழிக் கொள்கை என்பது தேவையில்லாதது. இரு மொழிக் கொள்கை போதுமானது.
திமுக இயக்கத்தின் நிறுவனர் அண்ணா அந்த காலத்தில் இருந்தே கூறி வருகிறார்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை வைத்து நமது திறமைகளை உலகம் முழுவதும் காண்பிக்க முடியும். இதுவே போதுமானது எனக் கூறுகிறோம்.
மூன்றாவது மொழி கற்றுக் கொண்டால் தவறில்லையே என மத்திய அரசு கூறுகிறது.
மூன்று மொழிகள் மட்டுமல்லாமல் 22 மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என நாங்களும் கூறுகிறோம். ஆனால் அதில் கட்டாயம் இருக்கக் கூடாது. விருப்பத்தின் அடிப்படையில் கற்றுக்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு குறிப்பிட்ட மொழியை கட்டாயம் இல்லை எந்த மொழியும் படிக்கலாம் என கூறுகிறார்கள் என தெரிவிக்கிறீர்கள்.

தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்றுவிட்டு மூன்றாவதாக வரும் மொழியில் அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என மீண்டும் அதே வகுப்பில் படிக்க கூறினால் எந்த விதத்தில் நியாயம்.
எதையும் திணிக்காதீர்கள் இரண்டு இட்லி போதும் என்று கூறும்போது மூன்றாவது இட்லியை வாயில் திணிக்கும் பொழுது எங்களது பிள்ளைகள் வாந்தி தான் எடுக்கும்.
எங்களுக்கு தேவை என்றால் நாங்கள் படிக்கிறோம். எங்களுக்கு அறிவு தான் முக்கியம்.
உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் ஒரு செல்போன் போதுமானது. எந்த மொழியில் கேள்வி கேட்க வேண்டும் என்றாலும் கூகுள் மூலம் மொழிபெயர்ப்பு செய்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
இது போதுமானது. கல்வி அறிவு என்ற பெயரில் மொழியை திணிக்க பார்ப்பது அது வேண்டாம் சார் எங்களை விட்டு விடுங்கள் சார்.
தமிழ் என்பது அடையாளம் ஆங்கிலம் என்பது வாய்ப்புகள்.
தமிழன் என்று கூறுவதற்கு தாய்மொழி தமிழ் உள்ளது.
உலகம் முழுவதும் எனது கருத்தை கொண்டு செல்வதற்கு ஆங்கிலம் போதுமானதாக உள்ளது. என்று நாங்கள் கூறுகிறோம்.
மத்திய அரசு அதைக் கேட்காமல் மீண்டும் மீண்டும் மும்மொழிகளை ஏற்கவில்லை.
இந்தி உள்ளே வருகிறது என்றால் சமஸ்கிருதம் உள்ளே வரும் சமஸ்கிருதம் வந்தால் பிற்போக்கு சிந்தனைகள் உள்ளே வந்துவிடும்.
புராணக் கதைகளை எடுத்துக்காட்டாக கூறி மாணவர்களை அறிவியல் சார்ந்து சிந்திக்க விடாமல் மழுங்கடிக்கும் பணிகளை அவர்கள் செய்வார்கள்” என தெரிவித்தார்.