தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சீப்பாலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த குருசாமி மகன் பவுன்ராஜ் (78). இவருடைய மனைவி பார்வதி (74) பெயரில் சர்வே எண் . 243/1, 2, பட்டா எண் 923, 1.40 சென்ட் நிலத்தில் தென்னை சாகுபடி செய்துள்ளனர்.
இந்த தென்னந்தோப்பு அருகே உள்ள நபர் தென்னந்தோப்பை ஆக்கிரமிப்பு செய்து வைத்துக்கொண்டு விவசாயம் செய்ய விடாமல் செய்கின்றனர். சீப்பாலக்கோட்டையில் தன்னுடைய நிலத்தில் தென்னந்தோப்பில் உள்ள தென்னை சாகுபடி தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வரும் பவுன்ராஜ் கடந்த 2018 ஆம் ஆண்டு காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உதவியுடன் நிலத்தை எடுக்க முயற்சி செய்தும் இதுவரை கையகப்படுத்தி நிலத்தை உரிய முறையில் பராமரிப்பு செய்ய முடியவில்லை.
மேலும் பவுன்ராஜ் 2019 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பெற்றும் நிலத்தை கையகப்படுத்தி தொடர்ந்து தென்னை சாகுபடி பராமரிக்க முடியாமல் விவசாயி தவித்து வருகிறார் .
எனவே தன்னுடைய நிலத்தை கையகப்படுத்தி விவசாயம் செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை எடுத்து வருகிறார்.