• Mon. May 6th, 2024

தனிநபர் ஆக்கிரப்பு: நிலத்தை மீட்டு தர வேண்டுமென முதியவர் 30 ஆண்டுகளாக போராட்டம்

ByJeisriRam

Apr 13, 2024

தனது தாயாருக்கு வழங்கப்பட்ட 95 சென்ட் பஞ்சமி நிலத்தை மீட்க கடந்த 30 ஆண்டுகளாக முதியவர் போராட்டம் நடத்தி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, ராமசாமி நாயக்கன்பட்டி ஊராட்சி, களிமேடு, சூரிய நாராயணபுரம் பகுதியில் உள்ள நத்தத்து மேடு பகுதியில் சொக்கலிங்கம் தாயார் ராமாயி என்பவருக்கு பஞ்சமி நிலம் 95 சென்ட், பட்டா எண் 1364, சர்வே எண் 264/5, நிலம் 16.2.1974 ஆம் ஆண்டு அரசு வழங்கியது.

அந்த நிலத்தில் சொக்கலிங்கம் தாயார் ராமாயி , தன்னுடைய பெயரில் மின் இணைப்பு பெற்று சென்னை சாகுபடி விவசாயம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் உத்தமபாளையம் நைனார் முகமது மகன் சாகுல் ஹமீது என்பவர், போலியான ஆவணங்கள் தயார் செய்து திண்டுக்கல் மாவட்டம் பழனி மகன் முத்தன் என்பவருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக கூறி கடந்த 1994 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

தனது தாயார் பெயரில் உள்ள பஞ்சமி நிலத்தை மீட்க சொக்கலிங்கம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து கடந்த 18.9.2014 ஆம் நீதிமன்றம் சொக்கலிங்கத்திடம் நிலத்தை ஒப்படைக்க உத்தரவிட்டது.

ஆனால் இதுவரை தனி நபர்கள் ஆக்கிரப்பில் உள்ள பஞ்சமி நிலத்தை மீட்டு மாவட்ட நிர்வாகம் சொக்கலிங்கத்திடம் ஒப்படைக்கவில்லை.

எனவே தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலத்தை மீட்டு தர வேண்டுமென சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *