• Mon. May 6th, 2024

போடியில் மின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம்: அரசு மருத்துவமனையில் அனுமதி

ByJeisriRam

Apr 14, 2024

தேனி மாவட்டம், போடியில் வரும் 23ஆம் தேதி அன்று அழகர் ஆற்றில் இறக்கும் சித்திரை திருநாளை முன்னிட்டு இன்று போடியில் அமைந்துள்ள பழமையான அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் கோவில் வாசலில் 24 அடி உயரம் உள்ள பச்சை மூங்கில் கொடி மரத்தை ஏற்றுவதற்காக சிறப்பு பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மூங்கில் கிளைகள் அருகில் உள்ள மின்கம்பத்தில் வயரில் பட்டு மூங்கில் வழியாக மின்சாரம் தாக்கியதில் மூங்கில் பிடித்திருந்த மோடி பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் மற்றும் காளிதாஜ் ஆகிய இருவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டன.

தூக்கி வீசியதில் படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக அக்கம் பக்கத்தினர்கள் காயமடைந்த இருவரை போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின் மூங்கில் மரத்தை மின்கம்பத்திலிருந்து எடுத்தனர்
கொடிமரம் ஏற்றும் போது இச்சம்பவம் நடைபெற்றதால் கொடிமரம் வரும் புதன் கிழமை ஏற்றுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *