• Tue. Jul 15th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

பழைய சூரமங்கலம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி முற்றுகைப்போராட்டம்

பழைய சூரமங்கலம் பகுதியில் சாலையின் இரு புறமும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அப்புறப்படுத்த கோரி பொதுமக்களுடன் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
சேலம் மாநகராட்சி பழைய சூரமங்கலம் 20 வது வார்டு பகுதியில் உள்ள பெரியார் தெரு பகுதியில் ஆண்டிப்பட்டி, சேலத்தான்பட்டி செல்லக்கூடிய பிரதான சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை ஆக்கிரமித்து இருபுறமும் உள்ள குடியிருப்பு வாசிகள் சிலர் வீடு கட்டி உள்ளனர் இதனால் இந்த சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்

மேலும் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லவும், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்லவும், பொது போக்குவரத்திற்கும் பெரும் இடையூறாக இருந்து வருகிறது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுப் பாதையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ள நபர்களை கண்டித்தும் நடவடிக்கை எடுக்க தவறிய அதிகாரிகளை கண்டித்தும் சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து சூரமங்கலம் மண்டல உதவி ஆணையர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து பேசினார்.இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்தனர். அதே நேரத்தில் எதிர் தரப்பை சேர்ந்தவர்கள் சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் குவிந்தது காவல்துறையுடன் வாக்குவாதத்தில் விடுபட்டதால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.