மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை அடிவார பகுதியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடந்த 2019-20 ஆம் கல்வியாண்டில் பள்ளி கல்வித்துறையால் வழங்கப்பட்ட காலணிகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,

அவ்வழியாக சென்றவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கிய ஆயிரக்கணக்கான காலணிகள் புதிதாகவும், மூட்டை மூட்டையாகவும் குப்பை போல கொட்டி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.,
இதே போல் வடுகபட்டி ஊரணி பகுதியிலும், பூதிப்புரம் கண்மாய் பகுதியிலும் பள்ளி மாணவ மாணவிகளின் காலணிகளை வீசி சென்றுள்ளனர்.,

சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான காலணிகளை வீசி சென்றது குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து மாணவ மாணவிகளுக்கு வழங்கிய காலணிகள் குப்பை போல வீசி சென்றவர்கள் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,




