மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், பந்தல் அமைக்கும் தொழிலாளியான இந்த இளைஞர், உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது அண்ணன் கார்த்திக் மகளை பார்க்க வந்துள்ளார். இரவு நேரமானதால் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே தூங்கி கொண்டிருந்தாக கூறப்படுகிறது.,

இந்நிலையில் மருத்துவமனை முன்பு மது போதையில் தகாத வார்த்தையால் பேசிக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் மகாராஜனை, மது போதையில் இருந்த ராமகிருஷ்ணன் இளைஞர் தட்டிக் கேட்டதாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் மகாராஜன் தனது ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து தூங்கி கொண்டிருந்த ராமகிருஷ்ணனை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வரும் சூழலில், விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் இளைஞரை வெட்டிவிட்டு தப்பி சென்ற மகாராஜனை தேடி வருகின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




