• Fri. Dec 13th, 2024

அகில இந்திய மஜ்லிஸ் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மாவட்ட அமைப்பாளர் முகமது அலி தலைமை தாங்கினார். இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் ஜஹாங்கீர் தேசிய கொடி ஏற்றினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சீனு சதுரகிரி கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்திய தேசிய லீக் கட்சி காசி முகமது முத்துவிலாஸ் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் மஜ்லிஸ் கட்சி சார்ந்த பவானி, ஆஷி உசேன், மாரீஸ்வரன், ஹக்கீம் ஆசிவ், சித்திக் ரிப்பான் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டதோடு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.