• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கல்லூரி மாணவ,மாணவிகளுக்காக பேருந்தில் பயணம் செய்த சட்டமன்ற உறுப்பினர்

Byதரணி

Jan 27, 2023

முகவூர் செட்டியார்பட்டி தளவாய்புரம் போன்ற பகுதிகளை சாரந்த 15 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் சிவகாசி அரசு கல்லூரியில் பயின்றுவருகின்றனர். அவர்கள் முகவூர் முதல் திருவில்லிபுத்தூர் வரை செல்லும் அரசு பேருந்தில் கல்லூரி பாஸ் இருந்தும் ஏற்ற மறுப்பதாகவும் கட்டணம் செலுத்தி பயண செய்ய வற்புறுத்துவதாக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியனிடம் நேற்று புகார் கூறினர்.இதனை அடுத்து இன்று காலை 10.30 மணிக்கு முகவூர் முதல் திருவில்லிபுத்தூர் செல்லும் அரசு பேருந்தில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்..தங்கப்பாண்டியன் பயணம் மேற்கொண்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் அரசு கல்லூரி பாஸ் வைத்துள்ள மாணவ மாணவியர்களை எவ்வித காரணமும் செல்லாமல் பேருந்தில் ஏற்ற வேண்டுமென கூறினார்

. மேலும் திருவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்து கழக மேலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபோல் இனி வரும் நாட்களில் நடைபெறக்கூடாது. அரசு கல்லூரி பாஸ் வைத்துள்ள மாணவ மாணவியர்களை பேருந்தில் ஏற்றி மரியாதையுடன் பயணிக்க வழிவகை செய்ய அனைத்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
புகார் அளித்தவுடன் நடவடிக்கை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ் .தங்கப்பாண்டியனுக்கு பயணிகளும் மாணவ மாணவியர்களும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.