• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சட்டப் போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவ வீரர்

ByJeisriRam

Nov 5, 2024

கடந்த 2012 ஆம் ஆண்டு பொய் வழக்கு போட்டு கடுமையாக தாக்கி சிறையில் அடைத்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கடந்த 13 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவ வீரர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறை ஊராட்சி சேர்ந்த முத்தையா மகன் தெய்வம் (41) முன்னாள் ராணுவ வீரர். இவரை கடந்த 2012 ஆம் ஆண்டு மயிலாடும்பாறை காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு கடுமையாக தாக்கி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெய்வம் கேட்டபோது, அதற்கு கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, காவல்துறையினர் சாட்சியங்களும் உரிய ஆவணங்களும் இல்லை என தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டது. சிபிசிஐடி ஆய்வாளர் காவல்துறையினை காப்பாற்ற பொய்களுக்கு போட்ட ஆவணங்களை தெய்வத்திடம் இருந்து தொடர்ந்து வாங்க மறுத்து வருகின்றனர்.

இது குறித்து ஆவணங்களை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அப்பொழுது அரசு வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்யுமாறு பதில் அளித்தனர்.

அதனை தொடர்ந்து சிபிசிஐடி ஆய்வாளர் தொடர்ந்து ஆவணங்களை வாங்க மறுத்து வருகிறார். இது குறித்து சிபிசிஐடி உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர் தெய்வத்திடமிருந்து ஆவணங்களை வாங்கி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனாவிடம் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மனு அளித்தார்.