• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

தேனி புதிய பேருந்து நிலையம் அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை பரபரப்பு

தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள புதிய பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் 70 வயது மதிக்கதக்க முதியவர் தூக்கிட்டு நிலையில் உயிரிழப்பு. தேனி நகர் காவல் துறையினர் விசாரணை.

தேனி விஸ்வதாஸ் நகரை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 70 )இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் வீரமணி (வயது 36 )கார்த்திக் (வயது 33 )என்ற இரண்டு மகன்களும் உமாதேவி ( வயது 38) என்ற மகளும் உள்ளனர்.

இவர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் பெட்டிகடை நடத்தி வந்துள்ளார் .

தர்மராஜ் வழக்கம்போல் அதிகாலை 3 மணி அளவில் பெட்டி கடைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் காலை 10 மணி வரை எவ்வித தகவலும் இல்லாததால் தர்மராஜனின் பேரன் தியாகராஜன் என்பவர் பெட்டிக்கடைக்கு வந்து பார்க்கும் போது மின்விசிறியில் கயிறு தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் .பின்னர் கடைக்குள் வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் தர்மராஜ் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதனை தொடர்ந்து தகவல் அறிந்த தேனி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இவர் இறந்தது தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.