• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் நாடாளுமன்ற பொது தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடைமுறைப்படுத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

ByG.Suresh

Jan 4, 2024

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் 2024 ஆம் நாடாளுமன்ற பொது தேர்தலில் மீண்டும் வாக்கு சீட்டு முறையை நடைமுறைப்படுத்தவும், தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தீவிர பேரிடராக அறிவிப்பு செய்ய வேண்டும், 21,000 கோடி நிவாரணம் நிதி வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதில் மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் பாலையா, இளைய கௌதமன், மண்டல துணை செயலாளர் முத்துராசு, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆற்றலரசு, மாநிலத் துணைச் செயலாளர் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.