• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அமிதாப் பச்சனுக்கு படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயம்

ByA.Tamilselvan

Mar 6, 2023

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்தார். இவர் பிரபாஸ் உடன் பான் இந்தியா படமான புரொஜெக்ட் கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுவிப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சண்டைக் காட்சியின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி அமிதாப் காயம் அடைந்தார். இதில் அவரின் விலா எலும்பு பகுதி உடைந்தது. உடனடியாக அவரை ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பல்வேறு பரிசோதனைகள் செய்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். Also Read – ஓய்வு பெறும் வயதை குறைக்க திட்டம்!! தற்போது அவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அமிதாப்பிற்கு நிகழ்ந்த விபத்தால் புரொஜெக்ட் கே’ படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப், வலி இருக்கிறது, இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். எனது நலம் விரும்பிகளை சந்திக்க முடியாது, ரசிகர்கள் யாரும் வீட்டின் முன் கூட்டம் சேர வேண்டாம், எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அமிதாப் பச்சன் விரைந்து குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.