• Thu. Apr 25th, 2024

அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் சேலம் கிளை ஆலோசனைக் கூட்டம்

அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் (ASM)என்ற சர்வதேச அமைப்பின் சேலம் கிளை தொடங்க ஆலோசனைக் கூட்டம் தனியார் நட்சத்திர விழா நடைபெற்றது…
 சேலத்தில் அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் எனும் சர்வதேச அமைப்பின் கிளையை தொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேலம் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் சேலம் மெட்டீரியல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சேலம் மெட்டீரியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் எம்.வசந்த் வரவேற்றார்.


அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் எனும் சர்வதேச அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அதன் இந்திய தேசியக் குழுத் தலைவர் வி.பாபுசத்யன் பேசினார். அப்போது பேசிய அவர் உலகளவில் அதிக இரும்பு உற்பத்தி இந்தியாவில் உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சேலம் மாவட்டம் இரும்பு தாதுக்கள் நிறைந்ததாக இயற்கையாக அமைந்துள்ளது. மேலும், உலோகவியல் மற்றும் இரும்பு தளவாட தொழில் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் சேலத்தில் உள்ளது. சேலம் உருக்காலை, மேச்சேரி ஜே.எஸ்.டபிள்யூ முக்கிய தொழில் நிறுவனங்கள் உள்ளன. சேலத்தின் தொழில் வாய்ப்பினை சர்வதேச வாய்ப்புகளுக்கு கொண்டு சென்றிடும் வகையில் அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் எனும் சர்வதேச அமைப்பின் சேலம் கிளை செயல்பாடுகள் அமையும். இதன் மூலம் சந்தை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் தொழில்வளம் பெருகி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் ஏற்படும் என்பதால் சேலம் பகுதிக்கு மிகுந்த பயனளிப்பதாக அமையும் என்றார்.
சேலம் பாதுகாப்பு தளவாட வாய்ப்புகள் குறித்து சேலம் ஏரோஸ்பேஸ் நிறுவனர் ஆர்.சுந்தரம், தொழில் வாய்ப்புகள் குறித்து ஜே.எஸ்.டபிள்யூ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவுத் தலைவர் மஞ்சினி ஆகியோர் பேசினர்.
அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் எனும் சர்வதேச அமைப்பின் மாணவர் வாய்ப்புகள் குறித்து அதன் செயலாளர் ஜே.ஆர்.நடராஜ்,  பொருளாதார வாய்ப்புகள் குறித்து நிர்வாகி பி.டி.பிண்டாகி (P.T.BINDAGI) ஆகியோர் பேசினர். பெரியார் பல்கலைக்கழக மேலாண்மைத் துறைப் பேராசிரியர் ஆர்.சுப்ரமணிய பாரதி கல்வி நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் குறித்தும், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவக்குமார் அரசு திட்டங்கள் சார்ந்த தொழில் வாய்ப்புகள் குறித்தும், உருக்காலை சார்ந்த வாய்ப்புகள் குறித்து சேலம் உருக்காலை பொதுமேலாளர் முருகபூபதி ஆகியோர் பேசினார். நிகழ்ச்சி முடிவில் சேலம் அரசு பொறியியல் கல்லூரி உலோகவியல் துறைத் தலைவர் நூருல்லா நன்றி கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *