மத்தியப்பிரதேசத்தில் சத்தார்பூர் மாவட்டத்தில் நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் சட்டமேதை அம்பேத்கர் சிலை காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம், சத்தார்பூர் மாவட்டத்தில் பாரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து நிதிதிரட்டி
ஒன்றரை அடி சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் சிலையை வாங்கினர். இந்த சிலையை கடந்த 11-ம் தேதி பாரி கிராமத்தில் இந்த நிலை நிறுவப்பட்டது. இந்த சிலைக்கு கிராம மக்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிலையில் 18 அங்குலம் உயரம் கொண்ட இந்த கற்சிலை நேற்று காணாமல் போனதைக் கண்டு அந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக காவல் துறையில், அந்த கிராம மக்கள் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து கர்ஹிமல்ஹாரா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அம்பேத்கர் சிலை திருட்டு தொடர்பாக இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் அம்பேத்கர் சிலை காணாமல் விவகாரம் பாரி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




