• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அம்பேத்கரும்-மோடியும் நூல் வெளியீடு…

Byகாயத்ரி

Sep 16, 2022

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் சீர்திருத்த திட்டங்களும், அதனை பிரதமர் மோடி செயல்படுத்திய விதம் குறித்தும் எழுதப்பட்டுள்ள அம்பேத்கரும்-மோடியும் எனும் நூல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நூல் வெளியீட்டு விழாவானது, டெல்லியில், மத்திய ஒலிபரப்புதுறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டு உள்ளது. இந்த விழாவில், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு நூலை வெளியிடுகிறார். ‘புளூகிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேசன்’ இந்த நூலை தொகுத்துள்ளது. இந்த விழாவுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், எல்.முருகன், நடிகை குஷ்பூ ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த நூலுக்கு அணிந்துரையை ராஜ்யசபா எம்.பி இசைஞானி இளையராஜா எழுதி இருந்தார். அம்பேத்கரும்-மோடியும் நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளதால், நிச்சயம் விழாவுக்கு இளையராஜா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விழாவுக்கு வரவில்லை.