• Tue. Feb 18th, 2025

குக் வித் கோமாளி சீசன் மூன்றில் இருக்கிறேனா? வி.ஜே.அர்ச்சனா

ரசிகர்களால் அதிக வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் பொங்கல் விடுமுறைக்கு பிறகு ஒளிபரப்பாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் புரோமோவில் சிவாங்கி, மணிமேகலை, பாலா, சுனிதா ஆகியோர் கோமாளிகளாக இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர்த்து சூப்பர் சிங்கர் புகழ் மூக்குத்தி முருகன் ஆகியோரும் இந்த சீசனில் கோமாளிகளாக களமிறங்க உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் குக்குகளாக யார் எல்லாம் வருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடையே இருக்கிறதும். பொதுவாக விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்களே பெரும்பாலும் போட்டியாளர்களாக களம் இறங்குவார்கள். அந்த வகையில் பின்னணி பாடகர் அந்தோணி தாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, வித்யு லேகா ஆகியோர் இந்த சீசனின் போட்டியாளர்கள் என சொல்லப்படுகிறது.
இவர்கள் இல்லாமல் விஜயலக்‌ஷ்மி, பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறிய தாமரை, விஜே அர்ச்சனா ஆகியோரது பெயர்களும் இந்த பட்டியலில் அடிபட்டன. இதில் தற்போது விஜே அர்ச்சனா, தான் குக் வித் கோமாளி சீசன்3-ல் பங்கேற்கவில்லை என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
‘பலரும் என்னிடம் குக் வித் கோமாளி சீசன்3-ல் இருக்கிறீர்களா என கேட்டு வருகிறீர்கள். ஆனால் அதில் நான் பங்கேற்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.