நடிகர் கவினின் ‘ஆகாசவாணி’ வெப் சீரிஸ் குறித்து புதுத்தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கவின். பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவருக்கு புகழ் வெளிச்சம் மேலும் கிடைத்தது. பிக்பாஸூக்கு பிறகு ‘லிஃப்ட்’ படத்தில் நடித்தார். கடந்த வருடம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘ஊர்க்குருவி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் நெல்சன் திலீப்குமார் இயக்கும் நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இதுதவிர்த்து ‘ஆகாஷ்வாணி’ என்ற புதிய வெப்சீரிஸ் நடிகை ரெபா நடித்துள்ளார். தற்போது அந்த வெப்சீரிஸ் குறித்தான சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈநாக் இயக்கும் இந்த வெப்சீரிஸ்ஸில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. பாடல்கள், இசையை அடிப்படையாக கொண்டு நகரும் முதல் வெப் சீரிஸ் கதை இது என்பது குறிப்பிடத்தக்கது. கவின், ரெபாவுடன் வாணி போஜனும் நடிக்கிறார். ‘என்னங்க சார் உங்க சட்டம்’ திரைபடத்திற்கு இசையமைத்த குண பாலசுப்ரமணியம் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த வெப்சீரிஸ் ‘ஆஹா’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.