

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மறைஞாயநல்லூர் அனந்தராசு அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் முதுநிலை அறிவியல் பொறியாளர் ஆக பணியாற்றி நிறைவு பெற்ற இப்பள்ளியின் முன்னாள் மாணவர் இரா.வீரன் தனது மனைவி திருமதி. மேனகா வீரன் அவர்களுடன் பங்கேற்று கல்வியின் முக்கியத்துவம் மனித மாண்புகள் நல்லொழுக்கம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களை கீழ்படிந்து ஏற்றல் குறித்து பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

அனைத்து மாணவர்களுக்கும் பேனா பென்சில் ரப்பர் ஜியோதிதி பெட்டி மற்றும் பிஸ்கட் பாக்கெட் ஆகியவற்றை தனது சொந்த செலவில் வழங்கினார். அனைத்து ஆசிரியர்களுக்கும் குடை வழங்கி ஆசிரியர் சேவையை பணியை சிறப்பாக செய்திட வாழ்த்தினார். தலைமை ஆசிரியர் பே. அம்பிகாபதி வரவேற்புரை நிகழ்த்தினார் தேசிய நல்ல ஆசிரியர் சு. செல்வராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் தி.செந்தில்நாதன் அவர்கள் விழாவில் பங்கேற்றார். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் வி. சின்னச்சாமி அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்.

