• Fri. Apr 26th, 2024

35 வருடங்களுக்கு பிறகு பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Byகுமார்

Oct 3, 2022

மதுரையில் யானைமலை ஒத்தக்கடை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்கள்35 வருடங்களுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 1986 முதல் 1998 ஆம் வருடம் வரை பயின்ற மாணவர்கள் 300க்கும்மேற்பட்டோர் 35 வருடங்களுக்கு சந்தித்து கொண்ட தோழர்கள் தோழிகள் தங்கள் குடும்பத்துடன் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது பள்ளியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் .
இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வினோத் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கம் மாநிலச் செயலாளர் முத்துமணி மற்றும் முனிசிபாலிட்டி மண்டல இயக்குனர் சரவணன் மற்றும் சாந்தமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் இவ்விழாவில்முன்னாள் மாணவர்கள் குழந்தைகளின் சிலம்பாட்டம் ,மேஜிக் ஷோ நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து தங்களுக்கு பயிற்றுவித்து நல்வழி படுத்திய ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து நினைவு பரிசுகள் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கூடத்துக்கு தேவையான பொருட்கள் வழங்கினார்கள் அதனை போன்று பள்ளியின் ஒரு வகுப்பறையை சுத்தம் செய்து பள்ளிக்கு அர்பணித்தனர் .இதை தொடர்ந்து பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி பொருட்கள் வழங்கினார்கள்.
அதனை தொடர்ந்து சிலம்பாட்ட வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினர் .மேலும் இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை விஜயசங்கர், மாரிமுத்து, செந்தில்குமார், அன்புதவமணி, இன்பரசன் மற்றும் முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர் இந்த விழாவில் முன்னாள் மாணவர்களும் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்வுடன் கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *