அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக ஜெயசுதர்ஷன் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார் அவர் பொறுப்பு ஏற்றவுடன் கட்சி நிர்வாகிகள் கூட்டம் பூத் பொறுப்பாளர்கள் அணி செயலாளர்கள் கூட்டம் என தினமும் ஒவ்வொரு நாளும் கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தை நடத்தி வருகிறார். கட்சியை விட்டு ஒதுங்கி இருந்தவர்களும் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தினமும் ஏராளமானோர் புதிய மாவட்ட செயலாளர் அவர்களை சந்தித்து கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இதனால் கட்சியில் இளைஞர்கள் எழுச்சியுடன் தீவிரமாக பணியாற்ற துவங்கி விட்டனர். வரும் 2026 சட்டமன்ற தேர்ததில் பத்மனாபபுரம் தொகுதியை அதிமுக கைப்பற்ற தீவிரமாக கட்சி பணியாற்றி வருகின்றனர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வியை தழுவியது. எனவே வரும் தேர்தலில் அமைச்சரின் தொகுதியில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கபடுகிறது.கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.