• Wed. Apr 24th, 2024

மேலும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லாத பயண சீட்டு -தென்னக ரயில்வே நிர்வாகம் தகவல்

ByA.Tamilselvan

May 2, 2022

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று காரணமாக பய ணிகள் மற்றும் விரைவு ரெயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வந்தது. அந்த ரயில்களில் முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது தொற்று வெகு வாக குறைந்து விட்ட நிலையில் படிப்படி யாக சிறப்பு ரயில்களில் முன்பதிவு இல்லா மல் பயணிக்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த மாதம் 14ந்தேதி நெல்லை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு இல்லா பயண சீட்டுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர், அனந்தபுரி உள்பட பல ரெயில்களிலும் முன்பதிவு இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்க கோரி தென்னக ரெயில்வேக்கு பய ணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நேற்று முதல் மேலும் சில ரெயில்களில் பய ணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யலாம் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள் ளது.அதன்படி தென்காசி வழியாக இயக்கப்படும் சிலம்பு, பொதிகை, கொல் லம் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நேற்று முதல் முன்பதிவில்லா பயண சீட்டு வழங்கப்படுகிறது.சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கு இயக்கப்படும்.
அனந்தபுரி(16723/24) எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127/28) ஆகிய ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் பய ணச்சீட்டுகளை உடனடியாக எடுத்து பயணி கள் அதில் பயணிக்கலாம். இதேபோல் சென்னையில் இருந்து தென்காசி, செங்கோட்டை வழியாக கொல் லத்திற்கு இயக்கப்படும் கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101/02), சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் (16181/16182), சென்னை திருச்செந்தூர் (16105/06) எக்ஸ்பிரஸ், செங்கோட்டை சென்னைக்கு இயக்கப் படும் தினசரி ரெயிலான பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவற்றிலும் முன்பதிவு இல்லாமல் உடனடியாக டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் என தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *