• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பனங்காட்டு படை கட்சி சார்பாக குழந்தைகள் காப்பகங்களில் அன்னதானம்

Byதரணி

Jan 2, 2023

சென்னை தாம்பரத்தில் பனங்காட்டு படை கட்சி சார்பாக குழந்தைகள் காப்பகங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.பனங்காட்டு படை கட்சியின் நிறுவன தலைவர் ஜெ. ராக்கெட் ராஜா பிறந்த தினமான இன்று அவரது 51வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் உள்ள குட் லைப் என்னும் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 100 குழந்தைகளுக்கு 3 வேளையும் உணவு வழங்கி கேக் வெட்டியும் கொண்டாடினர்.

இந்த உணவு மற்றும் கேக் களை மாநில இளைஞரணி செயலாளர் எஸ். ஆனைக்குடி சத்ரியன் பாபு மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் வேப்பங்காடு அருண், பாக்ஸர் நாடி முத்து,அயன் அருண், ஆகியோரின் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் இது போன்று தென்காசியில் உள்ள லவ்விங் கேன்ட்ஸ் என்னும் குழந்தைகள் காப்பக இல்லத்திலும் பனங்காட்டு படை கட்சியின் சமூக வலைத்தள அணி சார்பாக மதிய உணவும் வழங்கப்பட்டது.