• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வனத்துறையினர் அறையில் வைத்து அடித்ததாக குற்றச்சாட்டு.,

ByS.Ariyanayagam

Sep 10, 2025

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியிலிருந்து 5 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். மேல்மலை கிராமமான போலூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு தங்கும் விடுதி தேடியதாக கூறப்படுகிறது. கேரளா சுற்றுலா பயணிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள வருவாய் நிலத்திற்கு சென்று புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து ஆனைமலை புலிகள் வனப்பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதியில் பணியாற்றும் வனத்துறையினர் 2 பேர் நீங்கள் வனப்பகுதிக்குள் சென்று உள்ளீர்கள் எனவே ரூ.25 ஆயிரம் அபராதம் பிடிக்கப்படும் என்று சுற்றுலா பயணிகளிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகளுக்கும் வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வனத்துறையினர் 5 கேரள மாநில சுற்றுலா பயணிகளை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தனி அறையில் பூட்டி பணம் கேட்டு அடித்ததாகவும் வாகனத்தில் இருந்த ரூ.9,500 பணம் மற்றும் செல்போனை பிடுங்கி இனிமேல் வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள இடங்களுக்கு வரமாட்டேன் எழுதி வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.