தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், நோய்த்தொற்று பரவல் குறைந்த பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது. மேலும் கடந்த கல்வி ஆண்டு கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அதேசமயத்தில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாக மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், புதிய வகை ஓமைக்ரான் பரவல் காரணாமாக ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் மூடப்படுவதாக தமிழக முதல்வர் நேற்று அறிவித்துள்ளார். வருகின்ற ஜனவரி 10-ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவது உறுதியாகி உள்ளது. அதே சமயத்தில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் 10 பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கும் பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.