• Wed. Jan 22nd, 2025

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் … தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ByA.Tamilselvan

Aug 29, 2022

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்யும் தமிழக அரசின் முடிவிற்கு இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு .
தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்யும் முடிவிற்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்களை புதிதாக நியமிக்கவும் ,நீக்கவும் தடை விதிக்க பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மேலும் சுவாமியின் மனு மீது பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.