பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவி நீர்வரத்து குறைவால் பாறைகள் காட்சி, அருவியில் தடுப்பு கம்பிகள் புதுப்பிக்க வனத்துறையினர் ஏற்பாடு,வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவி சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாமல் வெயில் தாக்கம் அதிகரித்து வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக கவியருவியில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
இதனால் ஆழியார் கவியருவிக்கு வரும் நீர் வரத்து குறைந்து உள்ளதால் வனத்துறை சார்பில் கவியருவியை மூட உத்தரவிடப்பட்டது.இதனை அடுத்து ஆழியார் கவியருவி மூடப்பட்டது. இதனால் சுற்றுலா ஏமாற்றத்துடன் திரும்பினார்மேலும் அருவியில் தண்ணீர் இல்லாததால் பாறைகள் காட்சியளிக்கிறது கவி அருவி சுற்றிலும் ஏராளமான குரங்குகள் உள்ளன தற்போது உணவு இல்லாததால் சாலையோரம் இருக்கும் உணவுகளை தேடி செல்கிறது. இதனால் வால்பாறை செல்லும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது,தற்போது வால்பாறை கவர்கல் பகுதியில் சீதோசன நிலை பனிமூட்டங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் ஏராளமான உள்ள பணிகள் வால்பாறை செல்கின்றனர்.

ஆகவே ஊட்டி கொடைக்கானல் பிறகு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை இருக்கும் என்பதால் ஆழியார் சோதனை சாவடியில் வனத்துறையினர் தீவிர கட்டுப்பாடுகள் விதித்து வால்பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதி ஆனைமலை புலிகள் காப்பகம் கள துணை இயக்குனர் பார்க்கவ தேஜா உத்தரவின் பேரில் பொள்ளாச்சி வனச்சரகர் ஞான பாலமுருகன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆழியார் சோதனை சாவடியில் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் சோதனை செய்து தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் சாலையோர உள்ள புற்கள் காய்ந்த நிலையில் உள்ளது.
ஆகவே சுற்றுலாப் பயணிகள் மது பாட்டில்கள் சிகரெட் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள் சோதனை சாவடியில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வனத்துறையினர் மலைப்பாதைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடும் வருகின்றனர். வனச்சரகர் கூறுகையில் கவி அருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கவியருவியில் காற்றாற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட பாதுகாப்பு கம்பிகள் அகற்றப்பட்டு சுற்றுலா பயணிகள் நலன் கருதி கவியருவியில் புதிதாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும். அதற்கு தேவையான நிதி கோரப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் வரும் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதற்கு தகுந்தார் போல் உறுதியான தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் அருவி புதுப்பிக்கப்படும் எனவும் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதி பகுதியில் நிற்கக் கூடாது.
வனவிலங்குகள் கோடை வெயில் தாக்கத்தினால் நீர்நிலைகளை தேடி சாலைகளில் நடமாட்டம் உள்ளதால் பாதுகாப்பாக செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் தென்படும் குரங்குகளுக்கு உணவளித்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார். மாலை ஆறு மணிக்கு மேல் சுற்றுலாப் பணிகள் வால்பாறை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .