தேவையானவை:
பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – 200 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அதில் கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் தயாரித்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இந்த தோசைக்கு எந்த சைட் டிஷ்ஷ_ம் வேண்டாம். அப்படியே சூடாக சாப்பிடலாம். பாசிப்பருப்பு, வயிற்றுப் புண்ணை ஆற்றும் குணமுடையது.