• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

போர்ச்சுக்கல் நாட்டு தெருக்களில் ஆறாக ஓடிய மது..!

Byவிஷா

Sep 12, 2023

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள தெருக்களில் மது ஆறு போல் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர்ச்சுகல் நாட்டு மது வகைகள் உலக அளவில் புகழ் பெற்றவை ஆகும். குறிப்பாக இங்கு விற்கப்படும் ரெட் ஒயின் மதுவுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்நாட்டில் மது உற்பத்தி என்பது நாடெங்கும் பரவலாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நகர் மற்றும் சிற்றூர்களில் இவை அதிகமாக உள்ளன.
அவ்வகையில் இந்நாட்டில் உள்ள சவ் லாரென்ஸ் டி பைரோ என்னும் ஊரில் ஒரு ரெட் ஒயின் தொழிற்சாலை உள்ளது. இங்கு உற்பத்தி செய்யும் ரெட் ஒயின் மது தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலையில் பெயர் லெவிரா டிஸ்டிலரிஸ் ஆகும், இங்கு திடீரென தொட்டிகள் உடைந்துள்ளன.
இதனால் மொத்தம் 6 லட்சம் லிட்டர் ரெட் ஒயின் மது வெளியேறி அந்நகர தெருக்களில் வெள்ளமாக ஓடி உள்ளது. நேற்று முன் தினம் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டாலும், வேறு பல பாதிப்புக்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையொட்டி லெவிரா டிஸ்டில்லரிஸ் நிர்வாகம் இந்த நிகழ்வுக்காக மக்களிடம் மன்னிப்பு கோரி உள்ளது. மேலும் இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நிறுவனமே பொறுப்பேற்கும் எனவும், இதைச் சரி செய்ய ஏற்படும் செலவுகளை நிறுவனமே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளது.