• Fri. May 3rd, 2024

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பு.., அரசு விளக்கம்..!

Byவிஷா

Sep 12, 2023

தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பத்திவர்களில் சுமார் 57லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், மாநிலம் முழுவதும் சுமார் 1 கோடியே 63 லட்சம் பயனர்கள் விண்ணப்பத்திருந்த நிலையில், அவர்களில், 1கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மற்ற சுமார் 57 லட்சம் விண்ணப்பதாரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் வரும் 15ந்தேதி அண்ணா பிறந்த நாளில், காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அதிகாரிகளுடன், மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க விழா, நிதிநிலைமை உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசின் தலைமை செயலாளர் சிவ்டாஸ் மீனா, திட்ட சிறப்பு அதிகாரி இளம் பகவத், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர் தரோஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்..
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் இதுதான். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கு மேற்பட்ட பெண்கள் ஆயிரம் ரூபாய் மாதந்தோறும், ஆண்டுந்தோறும் பெற போகிறார்கள். அதிகப்படியான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டமாகவும், அதிகப்படியான பயனாளிகள் உள்ளடக்கிய திட்டமாகவும் இது அமைந்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியானவர்கள். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1.06 கோடி பேருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி காட்டும் பொறுப்பும், கடமையும் அதிகாரிகளுக்கு இருக்கிறது.
தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரும் செப்.15 முதல் கிடைக்கும் வகையில் நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இத்தகைய தகுதி பெற்ற குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் வங்கி கணக்கில் ரூ.1000 உரிமைத்தொகை வரவு வைக்கப்படும். இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. ஆனால் ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *