• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஏகே 61 பட ஷூட்டிங் புகைப்படங்கள்… இவரும் இருக்காரா..??

Byகாயத்ரி

Jul 13, 2022

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் இயக்குநர் வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்படி இப்படத்தின் ஷூட்டிங் தற்போது வடசென்னையில் நிலையில் அங்கு எடுக்கப்ட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. மேலும் தற்போது இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல தெலுங்கு நடிகர் அஜய்-ன் புகைப்படம் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் இப்படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளதாகவும், புனேவில் AK61 ஷூட்டிங் தொடரும் எனவும் கூறப்படுகிறது. அதில் நடிகர்கள் ஜான் கொக்கேன் மற்றும் வீரா நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.