அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில், கால்பந்து விளையாட்டின் உச்ச நிர்வாகக் குழுவான ஃபிஃபா, இந்திய கூட்டமைப்பை இடைநீக்கம் செய்துள்ளது.
மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற செல்வாக்கு காரணமாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை (AIFF) உடனடியாக இடைநீக்கம் செய்ய ஃபிஃபா கவுன்சில் ஒருமனதாக முடிவு செய்துள்ளது. இது ஃபிஃபா சட்டங்களை கடுமையாக மீறுவதாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து கூட்டமைப்பில் புதிய நிர்வாகிகள் இன்னும் முறையான தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. AIFF செயற்குழுவின் அதிகாரங்களை ஏற்க நிர்வாகிகள் குழுவை அமைக்க உத்தரவு பிறப்பித்தபின் இந்த ரத்து திரும்ப பெறப்படும் என்று ஃபிஃபா தெரிவித்துள்ளது.
2022 அக்டோபர் 11-30 தேதிகளில் இந்தியாவில் நடைபெற உள்ள FIFA U-17 பெண்கள் உலகக் கோப்பை 2022, திட்டமிட்டபடி தற்போது இந்தியாவில் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்ற ஃபிஃபா தற்போது முடிவு செய்துள்ளது.