• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வெளியானது துணிவு பட அஜித்தின் மாஸ் லுக்

ByA.Tamilselvan

Dec 4, 2022

துணிவு’ படத்தில் நடிகர் அஜித் துப்பாக்கியுடன் இருக்கும் கிளாஸ் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். அட்டகாசமாக உருவாகியுள்ள இப்படம் 80-களில் நடந்த பஞ்சாப் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் ‘மங்காத்தா’ ஸ்டைலில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் மிகவும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காட்சிகளில் டூப் இல்லாமல் நடிகர் அஜித்தே நடித்துள்ளார்.
அதேபோன்று படத்தின் ஒவ்வொரு காட்சியையும் எச்.வினோத் செதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்டுகள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் இருந்து அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் துப்பாக்கியுடன் மாஸ் கிளாஸாக அதில் உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.